உலக சுகாதார ஒழுங்கமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலத்தீன் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ், தற்போது உலக அளவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் தாக்குதலினால் சிறுதலை நோய் எனப்படும், மூளை வளர்ச்சியடையாமல் குழந்தைகள் பிறக்கின்ற நிலைமை காணப்படுகிறது.
ஆபிரிக்காவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்த இபோலா வைரஸ் பிரிவிலேயே, சீகா வைரஸையும் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி இருக்கிறது.
இதன்படி சீகா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளும், சிகிச்சைகளும் வேகப்படுத்தப்படவுள்ளன.


0 Comments