யுவதிகளை நிர்வாணமாக நடனமாட வைக்க முயன்ற போலி நடன ஆசிரியர் பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திரைப்படம் ஒன்றில் நடனக் காட்சியில் நடிக்கத் தேவையென பத்திரிக்கையில் விளம்பரமொன்றை வழங்கியுள்ளார்.இதன்போது மூன்று யுவதிகள் மற்றும் நபரொருவரை அவர் தெரிவு செய்துள்ளார்.
பின்னர் அவர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ள குறித்த நபர் , அவர்களிடம் அங்க அசைவுகளை சரியாக அவதானிக்கும் பொருட்டு நிர்வாணமாக நடனமாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடமிருந்து தப்பித்த யுவதிகள் மற்றும் இளைஞர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் அந்நபரையும் , அவரது மனைவியையும் கைதுசெய்துள்ளனர்.
நடன ஆசிரியர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ள போதும் அவர் ஒரு மேலதிக நேர வகுப்பு ஆசிரியர் எனக் கூறப்படுகின்றது.


0 Comments