Subscribe Us

header ads

ஊக்கம் தரும் வீட்டுக்கல்வி


கல்வி என்பது இரட்டை வழி கொண்டது. பாடசாலைக் கல்வி என்பது ஏட்டுக் கல்வி. பாடசாலையை கடந்த கல்விகள் அனைத்தும் வாழ்க்கைக் கல்வி அல்லது வீட்டுக் கல்வியாகும். வீட்டுக்கல்வியில் அதிக கவனம் செலுத்துவது வாழ்க்கைக்கு அவசியமானது. வீட்டுக்கல்வி ஏன் அவசியம், வீட்டுக் கல்வி அனுபவம் சிறப்பாக அமைய செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி இங்கே சில டிப்ஸ்... 

* வீட்டுக்கல்வியில் நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் கிடைக்கிறது. குறிப்பாக தொலைதூர கல்வியாக நமது விருப்பப் பாடத்தை தேர்வு செய்து படிப்பதால், ஊக்கத்துடன் படித்து, எளிதில் சாதனை படைக்கலாம். 

* சினிமா உலகில் நடிக்கும் சிறுவர்கள், நடிகர்-நடிகைகள் பலர் வீட்டுக் கல்விச்சூழலை பிரதானமாக கொண்டு படிக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் இலக்கை எட்டிப்பிடிக்கிறார்கள். 

* சரியாக பாடங்கள் புரியாத மாணவர்களும், பெற்றோரின் உதவியுடன் படிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளும் நம்பியிருப்பது வீட்டுக்கல்வியையே. இவர்களே டியூசன் மற்றும் பயிற்சி மையங்களுக்குச் சென்றும், தனி பயிற்சியாளரை நியமித்தும் கல்வி கற்று தேர்ச்சி பெறுகிறார்கள். 

* வீட்டுக் கல்வியில் எளிமையான பயிற்சிகள் வழங்கப்படுவது சிறப்பம்சமாகும். குறிப்பாக மாணவரின் திறனுக்கேற்ப தேவையான அளவில் பாடங்கள் பயிற்சியளிக்கப்படுகிறது, முக்கியமானவற்றை புரிந்து கொள்ள பல யுத்திகளின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது. தவறுகளும் கனிவான முறையில் சுட்டிக் காண்பிக்கப்பட்டு திருத்தப்படுகிறது. கற்பதற்கு போதிய இடைவெளி வழங்கப்படுகிறது. 

* பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்கள்கூட பயிற்சி மையங்களில் சென்று திறமைகளை மேம்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்பும் துறையில் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். எனவே திறமைகளை மெருகேற்றுவதிலும் வீட்டுக்கல்வி முக்கிய அங்கம் வகிக்கிறது. 

* பெற்றோரும் வீட்டுக்கல்வியில் நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஏனெனில் வீட்டுக் கல்வி பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது. இதனால் 'தங்கள் குழந்தைகள் தவறான பாதையில் செல்வது தடுக்கப்படுகிறது' என்பதை பெற்றோர் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அவர்களின் அச்சம் விலகுகிறது. நிஜத்திலும் சிறந்த கண்காணிப்பு முறையால் மாணவர்களின் திறன் மேம்படுவது உண்மையே. 

* நிறைய வரவேற்பு இருப்பதால் வீட்டுக்கல்வி, பயிற்சியாளர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. 

* தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றுக் கொள்ள முடியும். தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் அனைத்தும் ஸ்மார்ட்கிளாஸ்களாக மாற்றம் பெற்றுவிட்டன. இன்னும் குறுகிய காலத்திலேயே வீட்டிலிருந்தபடியே பாடம் கற்கும் காலமும் கனிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலை நாடுகளில் பல கல்வி நிறுவனங்கள் 'வீட்டிலிருந்தபடியே பாட வகுப்புகள்' என்ற முறையை பின்பற்றுகின்றன. 

* வீட்டுக்கல்விக்கு இடையூறாக இருப்பவை செல்போன், இன்டர்நெட் மற்றும் தொலைக்காட்சி போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடுதான். பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் சுய கட்டுப்பாட்டின் அடிப்படையில் இந்த இடையூறுகளை தவிர்த்தால் வீட்டுக்கல்வி சிறந்த பலன் தரும். 

* அதிக சுதந்திரம் கிடைப்பது, ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடி பயிற்சி பெறுவதில் குறைபாடு ஏற்படுவது, எதிர்பாலினத்தவருடன் சேராத தனிமை உருவாக்கும் மேலாண்மை பண்பு குறைபாடு போன்றவை வீட்டுக்கல்வி பலன்களில் ஏற்ற இறக்கங்களை தரலாம். இவற்றையும் களையும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டால் மாணவரின் திறன்கள் மேம்படும். 

* ஏட்டுக்கல்வியும், வீட்டுக்கல்வியும் பெற்று அறிவு வளம் மிக்கவர்களாக மாறுவோம்!

Post a Comment

0 Comments