புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், கைத்தொழில்
வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை, புத்தளம்
சோல்டனில் சந்தித்து, தாம் எதிர்நோக்கும்
பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.
இலங்கையின் உப்பு உற்பத்தி நுகர்வில் புத்தளம் மாவட்டம் 30% நிவர்த்தி செய்வதாகவும், புதிய தொழில்நுட்ப
பாவனை இருந்ததால் இந்தத் துறையில் தாம் மேலும் முன்னேற்றம் அடைய முடியும் என
அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
புத்தளம் உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் மின்சார வசதி இருந்ததால் உப்பு
உற்பத்தியை மேலும் 50% அதிகரிக்கச் செய்து, உற்பத்திச் செலவை 25% குறைக்க முடியும்
என்றும், அரசாங்கம் மின்சார வசதியை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க
வேண்டுமெனவும் அவர்கள் அமைச்சரின் மூலம் கோரிக்கை ஒன்றையும் விடுத்தனர். அத்துடன்
நவீன தொழில்நுட்ப உபகரணங்களை மானிய விலையில் பெற்றுக்கொள்வதற்கும், சோல்டனில்
வினைத்திறனுள்ள ஆய்வு கூடம் ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக்
கோரிக்கைகளை அமைச்சர் முடிந்தளவில் பரிசீலனை செய்து, உப்பு
உற்பத்தியாளர்களுக்கு உதவுவதாக தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற
உறுப்பினர் நவவி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். இல்யாஸ் ஆகியோர்
கலந்துகொண்டு பயனுள்ள கருத்துக்களைத் தெரிவித்தனர்.
0 Comments