Subscribe Us

header ads

5 வயது மாணவியின் கட்டுரையால் ஆசிரியை அதிர்ச்சி..


என் தந்தை மிகவும் கெட்டவர் என்றும், அம்மாவை தினமும் அடித்து துன்புறுத்துவார் என்று 5 வயது மாணவி கட்டுரையில் எழுதி இருப்பது கண்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.

கொல்கத்தாவில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 5-வது வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு ”என் குடும்பம்” என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை எழுதுமாறு வகுப்பு ஆசிரியர் கூறியுள்ளார்.

மாணவ மாணவிகள் கட்டுரைகளை எழுதி ஆசிரியிடம் கொடுத்தனர். மாணவ மாணவிகளின் எழுதிய கட்டுரைகளை படித்து பார்த்து கொண்டிருந்த ஆசிரியை 5 வயது சிறுமி எழுதிய கட்டுரையை பார்த்து அதிர்ந்து போனார். அதில் அந்த சிறுமி என் தந்தை மிகவும் கெட்டவர். தினமும் என் அம்மாவை அடித்து துன்புறுத்துவார் என்றும், எங்கள் குடும்பத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் மாமாக்கள் செவிசாய்க்காமல் இருக்கின்றனர். நான் வளர வளர என் அம்மாவை அப்பாவிடம் இருந்து மீட்டு செல்வேன் என்று எழுதி உள்ளார். மாணவியின் இந்த கட்டுரையை படித்து விட்டு டீச்சர் அதிர்ச்சி அடைந்தார்.

மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர் அவர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மாணவியின் எதிர்காலம் கருதி பெற்றோர் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சிறுமியின் பெற்றோரிடம் வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments