Subscribe Us

header ads

சிறைச்சாலையில் உள்ள யோசிதவிற்கு பாய் தலையணை வழங்கப்பட்டுள்ளன!

கொழும்பு சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுற்பட அவருடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களுக்கும்  பாய்கள், தலையணைகள் போன்றன வழங்கப்பட்டுள்ளன.

பொதுபல சேனா அமைப்பின்பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு வெலிக்கடை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய கைதிகளை பார்வையிட வரும் நபர்களும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் உள்ளே கலக நிலைமைகள் ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments