Subscribe Us

header ads

பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு என ரோஹினா மஹரூஃப் குறிப்பிட்டார்.


பைஷல் இஸ்மாயில் -

பெண்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை  நல்லாட்சி அரசு பெற்றுக்கொடுத்தமையை தான் வரவேற்பதாகவும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு என ரோஹினா மஹரூஃப் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ..

காலம்சென்ற  ஸ்ரீமாவோ பண்டாரநாயக அவர்களை உலகின் முதல் பெண் பிதரமராக உருவாக்கியது மற்றும் திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக குமாரனதுங்க அவர்களை உலகின்   நிறைவேற்று அதிகாரமுள்ள முதல் பெண் ஜனாதிபதியாக உறுவாகியது போன்ற வரலாறுகளை கொண்ட எமது நாட்டில் பல பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவுமஅமைச்சர்களாகவும் உள்ளனர்.

இலங்கை அரசியல் நீரோட்டத்தில் பெண்களுக்கு பல சலுகைகளும் வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டிருந்த போதிலும் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை பெண்களுக்கு வழங்கப்படாமை பெரும் குறையாகவே இருந்துவந்த அதேநேரம் இந்த உரிமையை எமக்கு பெற்றுக்கொடுக்க இதற்கு முன் எந்த அரசும் முயற்சி செய்யவோ முன்வரவோ இல்லை.

ஆனால் பெண்களின் அரசியல் உரிமைகளில் ஒன்றான இந்த உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இபிரதமர் ரணில் விக்ரமசிங்க அகியோரின் கூட்டு அரசாங்கத்தின் ஒருமித்த முடிவின் பேரில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு  வழங்கப்பட வேண்டுமென்ற சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் இலங்கை பெண்கள் மாத்திரமின்றி உலகப் பெண்மணிகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் விரும்பக்கூடியதுமான ஒரு விடயமாகும்.

நல்லாட்சியின் பங்காளர்கள் பெண்களுக்கான  இந்த உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளமையையிட்டு இலங்கையில் வசிக்கும் என்னை போன்ற லட்சக்கணக்கான பெண்கள் நல்லாட்சி அரசு அரசிற்கு கடமைப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இந்த உரிமையை எமக்கு பெற்றுக்கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments