Subscribe Us

header ads

மொடர்ன் மம்மி தாலாட்டு (கவிதை)


MOHAMED NIZOUS

அப்பிளே சம்சுங்கே
அன்றொய்டே விண்டோசே
சார்ஜ் முடிந்த போண்போல
சட்டென்று கண்வளராய்.

பாட்டி அடித்தாளோ
பாட்டு CD யாலே
பாட்டன் அடித்தானோ
பட்டன் போணாலே
அப்பன் அடித்தானோ
அவண்ட டெப்பாலே
மம்மி அடித்தாளோ
மடிக் கணனியாலே
அண்ணனும் அக்காவும்
அடித்திருக்க வாய்ப்பில்லை
பேஷ் புக் பார்ப்பதில்
பிஸியாக இருந்திருப்பார்
அடித்தாரை சொல்லியழு
அன்பிரண்ட் பண்ணிடுவோம்.

ஒண்டுக்கும் ஏலாட்டி
உனக்கு பாதி பிரிட்டன் தாரன்
திண்டுட்டு நீ தூங்கு.
டேட்டாவை கனக்ட் பண்ணி
இண்ட நெட் பார்ப்பதற்கு
எனக்கு டைம் தேவை.
சென்று நீ படுத்த பின்
செல்லமாய் அணைத்து
செல்பி ஒன்று எடுத்து
செயாரும் லைக்கும் பெற
பேஷ் புக்கில் போடும்
பெஷன் அம்மா நான்.
சார்ஜ் முடிந்த போண்போல
சட்டென்று கண்வளராய்.

Post a Comment

0 Comments