பணசலவை மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ தொடர்பான தகவல்கள் அண்மையகாலங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில் சிறையில் வைக்கப்பட்டுள்ள யோஷித அங்கு கைத்தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பான தகவல் அம்பலமாகியுள்ளது.
சிறைக்கு சென்ற தனது தந்தையை பார்வையிட்டு திரும்பிய வேளையில், யோஷிதவின் சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்துள்ளது. எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாம் அறியவில்லை என்று, சிறைச்சாலைகள் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் கிடைத்தால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், வாக்குமூலங்களை அளிக்க இரண்டு அதிகாரிகள் தயாராக இருப்பதாக, சிறைச்சாலையில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments