Subscribe Us

header ads

பாண் தொண்டையில் சிக்கி பெண்ணொருவர் பரிதாப மரணம்!

பாண் மற்றும் சம்பல் தொண்டையில் சிக்கி பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம், இசுருபாய என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதினையுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த பெண் அனுராதபுரம் பிரதேசத்திற்கு சுற்றுலா மேற்கொண்டு அங்கு உணவு உட்கொண்ட நிலையிலேயே குறித்த பரிதாப சம்பவம் நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மிகிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments