நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கைச் சரித நூல் ஒன்றை பரிசளிக்க சபாநாயகர் கருஜயசூரிய உத்தேசித்துள்ளார்.
பிரபல சிங்கள எழுத்தாளரான ருபேரு தந்திரிகே என்பவர் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கைச் சரிதத்தை சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
அண்மையில் அதன் பிரதியொன்றை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளித்துள்ள ருபேரு தந்திரிகே, ஜனாதிபதி அப்துல் கலாமின் பண்புகளை சிலாகித்துப் பேசியுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கு பஸ்ஸில் சென்று வந்துள்ள விடயம் சபாநாயகரை வெகுவாக கவர்ந்துள்ளது.
அனைத்து அரசியல்வாதிகளும் இந்த முன்மாதிரியைப் பின்பற்றி எளிமையாக இருக்க வேண்டும் என்றும், நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அப்துல் கலாமின் வாழ்க்கை முன்மாதிரியாக இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய சிலாகித்துள்ளார்.
அத்துடன் குறித்த நூலின் பிரதிநிதிகளை கொள்வனவு செய்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பரிசளிக்க தான் உத்தேசித்துள்ளதாகவும் சபாநாயகர் நூலாசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
0 Comments