கல்முனையில் அரங்கேறும் இன்னுமொரு ஏமாற்று வித்தை ... ஒர் அவலம் ...!
மூடர்களும் , ஏமாறுபவர்களும் இருக்கும் வரை , இவர்களை வைத்து பிழைப்பு நடாத்துபவர்கள் முன்னேறிக் கொண்டிருப்பார்கள் ,
ஒரு கூட்டம் மக்களின் மூட நம்பிக்கையை நன்றாக விளங்கி அவர்களை ஏமாற்றி தமது இயக்கத்தை வளர்ப்பதோடு நின்று விடாது வயிற்றுப் பிழைப்புக்கான வழிகளையும் செய்து கொள்கின்றனர் .
உலகில் இருக்கும் அரபு நாடுகளையும் தாண்டி , 1436 வருடங்கள் கழிந்த பிறகும் அதுவும் இலங்கை கல்முனை மக்களுக்கு மாத்திரம் நபியின் தலை முடி கிடைத்துள்ளதாம் !!!!
நபியின் பெயரால் நபி சொல்லாததை சொன்னதாகக் கூறும் வார்த்தைக்கே நபியவர்கள் இவ்வாறு என் மீது பலி சுமத்துபவன் நரகில் தமது ஒதுங்கும் தளத்தை ஆக்கிக் கொள்ளட்டும் என்று கூறியிருக்கும் பொழுது , நபியின் தலை முடியல்லாத எவரோ ஒருவரின் முடியை கொண்டு வந்து இது நபியின் முடியென போலியான நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எந்த அளவு கண்டனமும் எச்சரிக்கையும் இருக்கும் !
ஏன் இவ்வாறு மக்களை ஏமாற்றி அவர்களின் மூட நம்பிக்கையில் விளையாடுகின்றனர் ?
ஒரு ஹதீஸ் வருவதற்கு அறிவிப்பாளர் தொடர் வரிசை அத்தியவசியம் என்பதை உணர்ந்த நாம் ஏன் இந்த முடி விடயத்தில் உணர மறந்தோம் ?
நபி எச்சில் துப்பினது உட்பட அவர்கள் சென்ற பாதை , செய்த உடன் படிக்கை , சிரித்த சிரிப்பு முறைகள் , திட்டங்கள் , ஆடைகளின் வர்ணனைகள் , உடல் அமைப்பு , கொடுக்கல் வாங்கல் போன்ற இன்னோரன்ன விடயங்களை அறிவித்த ஸஹாபாக்கள் இந்த முடியையும் அறிவிக்காமலா விட்டிருப்பார்கள் !?
அவ்வாறு கிடைத்தது உண்மை எனில் அதற்கான சான்றாக அமையும் அறிவிப்பாளர் வரிசையை காட்ட வேண்டும் , ஆனால் அவ்வாறு கேட்கப்பட்ட பொழுது அவர்களிடம் அவ்வாறான அறிவிப்பாளர் வரிசை இல்லை , ஏன் அது பற்றிய அறிவே அவர்களுக்குத் தெரியாது . இதில் என்ன விசித்திரம் என்றால் நபியின் முடி என்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றுவது மட்டுமன்றி , அங்கு முடியைக் காண வருபவர்கள் தொப்பி அணிந்து , மௌனமாக , அமைதியோடு மெதுவாக ஸலவாத் ஓதிய வண்ணம் வர வேண்டுமாம் !!!.
நபியின் முடி ஸஹாபாக்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது உண்மை , ஆனால் இங்கு எழும் கேள்வி யாதெனில் ஆயிரம் வருடங்கள் உருண்டோடிய பின்பும் இஸ்லாமிய சாம்ராஜ்யங்களையும் தாண்டி , அரபு உலகும் அறியாத வகையில் , இலங்கையின் கல்முனை வாழ் மக்களுக்கு மாத்திரம் எவ்வாறு நபியின் முடி கிடைத்தது ?!
பள்ளிவாயலில் ஏன் இந்த ஏமாற்று வேலை ?
மக்கள் மடமை , மூட நம்பிக்கை போன்ற தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளாத வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பர் , இவர்களை வைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள் தமது பிழைப்பில் முன்னேறிக் கொண்டே இருப்பர் . மொத்தத்தில்
இவர்களின் மூலதனம் மக்களின் மடமையும் மூடநம்பிக்கையுமே ...
யா அல்லாஹ் மக்களுக்கு உண்மைய உண்மை எனவும் , வழி கேட்டை வழி கேடாக அறியும் பகுத்தறிவைக் கொடுத்தருள்வாயாக . ஆமீன்
இவண்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
15/02/2016
0 Comments