முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித்த இன்று கைது செய்யப்பட்டதுடன், பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இக்கைது தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இன் 3 ஆவது மகன் ரோஹித்த , தனது சகோதரனின் கைது தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கின் ஊடாக கருத்து தெரிவித்துள்ளார்.
"நல்லாட்சி அரசு சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டதாகவும், தற்போது சிங்கம் உங்களை துண்டு துண்டாக கிழித்தெறியாது என எதிர்பார்க்க வேண்டாம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments