முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளியாட்கள் சிறைச்சாலையினுள் நுழைவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை காண முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இன்று பிற்பகல் இவர் சிறைச்சாலைக்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜொன்ஸ்ட்டன் பெர்னான்டோ உட்;பட பலர் சென்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உட்பட்ட ஐந்து பேர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவு நேற்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.
சீ.எஸ்.என் அலைவரிசையின் விரிவாக்கல் பணிக்காக அரச உடமைகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் காரணங்களை முன்வைக்க முடியாத நிதி மானியங்களின் மூலம் நிறுவனத்தை ஆரம்பித்தல் மற்றும் நடத்தில் சென்றமை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக 5 பேரும் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
யோசித்த ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர், சி.எஸ்.என் நிறுவனத்தின் பிரதானி ரொஹான் வெலிவிட்ட மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான நிஷாந்த ரணதுங்க மற்றும் பணிப்பாளர்களான கவிஷான் திசாநாயக்க மற்றும் அஷான் பெனேன்டோ ஆகியோர் கைதாகியுள்ளனர்.


0 Comments