சுமார் 91 பேரின் உயிர்களை காவுகொண்டதுடன், ஆயிரத்து 400 பேருக்கு காயம் ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் 20 வருடங்கள் நிறைவடைகின்றன.
1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது, 26 பேர் இன்னமும் நிரந்தர அங்கவீனம் அடைந்த நிலையில் உள்ளனர்.
அன்றைய தினம் முற்பகல் 10.45 அளவில் 200 கிலோகிராம் வெடிபொருட்களுடனான பாரவூர்தி இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திற்குள் நுழைந்து வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது.
எனினும், கட்டிடத்தின் வெளியில் உள்ள இரும்பு வேலிகள் காரணமாக மத்திய வங்கி வளாகத்திலேயே குறித்த பாரவூர்தி வெடித்தது.
இதனையடுத்து 10 மாடிகளை கொண்ட மத்திய வங்கியின் முன்பகுதி முற்றாக சேதமடைந்தமை குறி;ப்பிடத்தக்கது.











0 Comments