Subscribe Us

header ads

ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலியான சோகம்


இந்தியாவின், மகாராஷ்டிராவில் முருத் கடற்கரைக்கு சுற்றுலா சென்றே புனே கல்லூரி மாணவர்கள் 14 பேர் கடலில் மூழ்கி பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாயமான மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், ரெய்கட் மாவட்டத்திலுள்ள முருத்-ஜஞ்சிரா கடற்கரைக்கு, புனே இனம்தார் கல்லூரி மாணவர்கள் 126 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
அதில் கடலில் நீந்தச் சென்ற 15 முதல் 18 மாணவர்கள் கடலில் தத்தளித்து நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த கடலோரக் காவல்படையின் விமானமும், இரண்டு படகுகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின், இதுவரை 14 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் கடற்படையினரின் இரு விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments