Subscribe Us

header ads

நான்காவது அகவையில் Kalpitiya Development Society - Qatar (KDSQ) ... (படங்கள், வீடியோ இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் ..

கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பு Kalpitiya Development Society - Qatar (KDSQ) தனது மூன்றாவது வருட நிறைவை முன்னிட்டு வருடாந்த பொதுக் கூட்டத்தை நேற்று 29-01-2016 கத்தார் சாலிமா வரவேற்பு மண்டபத்தில் நடத்தியது.
 கற்பிட்டி பிரதேசம் - அதனை  சேவைகளால்  செழித்திட வைக்க, கடல் கடந்து வந்த நாம்  KDSQ அமைப்பாய் ஒன்றினைந்தோம்.  அதன் தொடர்பணிகள் மூன்று வருடம் தொடர்ந்ததன் விளைவாய், எதிர்கால வினைதிறன் மிக்க சேவைகளை கொண்டியங்குவதற்காக நான்காம் வருட  ஆரம்ப அமர்கள நிகழ்வாக  அமைந்திருந்தது.

இந்நிழ்விற்குஅதிதிகளாக ஜனாப் பொறியியலார் M.I.M நிசார் அவர்களும், OPT Group Managing Director  ஜனாப் M சம்சுதீன் அவர்களும், மௌலவி M.M.M நபீல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .

நிகழ்ச்சிகள் யாவும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடைபெற்றது.

மௌலவி பாஹிம் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமான இப்பொது கூட்டத்தில் தலைவர் மிஷ்காத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பொருளாளர் முன்திர் KDSQ அறிமுக உரையை வழங்கினார்

தொடர்ந்து கடந்த வந்த பாதை மற்றும் எதிர்கால திட்டம்  பற்றிய விளக்க உரையை (presentation) சம்ஷாம்  அவர்கள் தொகுத்து வழங்கிய பின்னர் அதியாக கலந்து கொண்ட ஜனாப் பொறியியலார் M.I.M நிசார் அவர்கள் சிறப்புரையாற்றினார், நன்றி உரையைத் தொடர்ந்து இராப்போஷனத்துடன் இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிழ்வில் மொத்தமாக 65 சகோதரர்கள்  கலந்து கொணடனர் .

இந்த நிகழ்வு Kalpitiya Voice இணையத்தளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்ட அனைவருடைய வருகையும்,தொடர்ந்தியங்க ஒத்துழைப்போம் என்ற உடன்பாடும் ஏற்பாட்டுக்குழுவிற்கு இரண்டு திருப்திகளை ஏற்படுத்தியது.

 நாம் ஒன்றித்து  இலக்கினை  அடைய இறையருள் என்றும் பெற வேண்டும்  என பிராத்திக்கின்றோம்.
நன்றி....

























Post a Comment

0 Comments