Subscribe Us

header ads

share and care மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுபடுத்தும் பணியினை பு/வெட்டாளை அசன் குத்துாஸ் பாடசாலையில் செய்துள்ளது.(படங்கள் இணைப்பு)

 - அஸ்ஜத் இர்ஷாத் -

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று சொல்லும் பழமொழி ஞாபகம் வருகின்றது.இந்தப் பழமொழி எதற்கு என்று சிந்திப்பவர்களும் உண்டு.அத புரம் இருக்க முயற்சியும்,தன்னம்பிக்கையும் தான் ஒரு அமைப்பினது ஆளுமையின்  வெளிப்பாடாகும்.வெறும் பெயர் பலகையினை மட்டும் வைத்துக்கொண்டு இருப்பதை விட மறைநிதிருந்து பணிாயற்றும் அமைப்பின் தேவைப்பாடுகள் அதிகம்.இந்த பணியினை இன்று புத்தளத்தின் கல்வி சமூகத்திற்க மட்டுமல்ல வறிய குடும்பங்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கு தமது பங்களிப்பினை செய்துவரும் ஒரு அமைப்பாக share and care தொண்டர் அமைப்பினை காணமுடிகின்றது.

தமது 5 வது மாதத்தில் 3 வது வெற்றிகரணமான நிகழ்வாக மெலம் ஒரு தொகுதி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுபடுத்தும் பணியினை இந்த அமைப்பு செய்துள்ளது. புத்தளம் வெட்டாளை அசன் குத்துாஸ் பாடசாலையில் கற்றலில் ஈடுபடும் வறிய மாணவர்களின் கல்விக்காக அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியதன் மூலம் இதுவரைக்கும் 81 மாணவர்களின் கல்விக்கு பல உதவிகளை செயதுள்ளதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.

அதிலும் குறிப்பாக புத்தளம் வெட்டாளை அசன் குத்தாஸ் பாடசாலையினை தேர்தெடுத்து 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களளை கொடுத்தத் மூலம் அப்பிரதேச பெற்றோர்களின் சுமை ஒரளவு குறைந்துள்ளதை காணமுடிகின்றது.

அது மட்டுமல்லாமல் தம்முள் முடக்கி வைத்திருக்கும் தொழில் முயற்சிக்கு ஒரு சிறிய  உதவி கிட்டாத என்று எங்கித் தவிக்ககும் எத்தனையோ பெண்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் சிறிய தொழிற் முயற்சிக்கான உதவிகளையும் வழங்கி சமூக வறுமையினை தனது சக்திகுட்பட்ட விதத்தில் தீர்க்கும் பணியினையும் செயார் என்ட் கெயார் அமைப்பு செய்துவருகின்றமை பாராட்டுக்குரியது.

சமூகத்தின்  தேவைப்பாடுகளை மேலும் கண்டறிவதுடன்,அதனது விபரத்திரட்டு ஒன்றினை தயார்படுத்தி எதிர்காலத்தில் இன்னும் பல்துறைகளில் உதவிகளையும்,ஒத்தாசைகளையும் எமது புத்தளத்திற்கு வழங்கும் வகையில் இந்த அமைப்பு மேற்கொண்டுள்ள முயற்சியனை நாம் ஒவ்வொருவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

புத்தளம் சமூகத்தின் விடிவுக்காக அரப்பணம் செய்யும் இந்த அமைப்பின் சகோதரிகளின் பங்களிப்பு பெருமதியானது,அந்த வகையில் இந்த நற்பணிக்கு உதவி செய்த அனுசரணையாளர்கள் மற்றும் சுயமாக இப்பணிக்கு உதவும் தொண்டர்களுக்கும் இந்த சந்தரப்பத்தில் எமது நன்றியினை நாம் சொல்வது மேலும் இதனது வெற்றிக்கு உறுதுயைாக அமையும் என்பது எனது எண்ணமாகும்.














Post a Comment

0 Comments