Subscribe Us

header ads

பு/பாத்திமா பெண்கள் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிக்குரிய இல்லத்தின் பெயர்கள் மாற்றம் - அதிபர் முடிவு


பழையனவற்றை புதுப்பிக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலும் அது நடைமுறைக்கு வரும்போது அதனை நமது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை..

இதனை உருத்திப்படுத்தும் வகையில் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியில் அன்றிலிருந்து இன்று வரை இருந்துவரும் விளையாட்டுப் போட்டிக்குரிய இல்லத்தின் பெயர்களை மாற்றப்போவதாக புதிதாக பாடசாலையில் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியை மாஹிரா அவர்கள் அதிரடியாக ஆசிரியர்கள் மத்தியில் தனது முடிவை தெரிவித்திருக்கிறார்!

இந்த முடிவு குறித்து கல்லூரியில் இருக்கும் பெருமளவிலான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் பழைய மாணவர்களுக்கும் எந்தவித விருப்பமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று நமது முன்னோர்களால் நல்ல அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜமாலிய, கமாலிய, ஷமாலிய மற்றும் பாவஜிய போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டன, ஒவ்வொரு பெயர்களுக்குப் பின்னால் நல்ல அர்த்தங்கள் இருப்பது மட்டுமல்லாது, ஒவ்வொரு இல்லங்களும் நமது சமுகத்தில் இருக்கும் பலருக்கு சிறப்பான தலைமைத்துவ ஆற்றல், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, அன்பின் வலிமை, வெற்றியின் சுவை, தோல்வியின் பொறுமை மற்றும் பல ஆற்றல்களை உருவாக்கியிள்ளது என்பது யாராலும் மறக்கமுடியாத உண்மை, ஒவ்வொரு பழைய மாணவர்களின் வரலாற்றை எடுத்துப் பிரட்டிப்பார்த்தால் இந்த இல்லங்களின் பெயர்கள் எதோ ஒரு மூலையில் ஒட்டுக்கொண்டிருக்கும் என்பது நாம் அறிந்த உண்மை!

வருகின்ற சமுதாயமும் பாடசாலையின் வரலாற்றை மறக்காமல் மனதில் பதியவைக்க இந்த இல்லங்கள் பாரிய பங்கு வகிக்ள வேப்டும் என்பதுதான் எமது ஆசை, இருக்கின்ற இல்லங்களின் பெயர்களுக்கிடையில் காணப்படும் ஒருவித போட்டி புதிதாக கொடுக்கப்படும் பெயர்களினால் நிச்சயம் பலமிழக்கும் என்பது உறுதியான ஒருவிடயம்.

பாடசாளைப்பற்று என்பது இல்லங்களின் பெயர்களையும் பாடசாலை கீதத்தையும் வாயால் சுவைக்கும் போது உண்டாகும் ஊற்று என்றே கூற வேண்டும்! 

ஆகவே அந்தக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியில் இந்த சமுகத்தில் இருந்துவரும் பாடசாலைக் காலாச்சாரம் மற்றும் நமது பாடசாலையின் வரலாறு என்பவற்றை பாதுக்காக்கும் வகையில் பழைய பெயர்களை அழித்துவிடாமல் அப்படியே வைப்பதோடு; உலகவேகத்தின் வளர்ச்சியை பிரதிபளிப்பதட்காகவும், புதியனவற்றை புகுத்துவதட்காகவும் ஒவ்வொரு இல்லங்களுக்கும் ஒவ்வொரு ஆங்கிலப் பெயர்களை அறிமுகப்படுத்தி ஒரு புதுவித இல்லவிளையாட்டுப் போட்டியை எந்தவித கசப்புணர்வும் இல்லாது இந்த முறை நடாத்த வேண்டும் என்று என்றும் என் மரியாதைக்குரிய அதிபரை வேண்டிக்கொள்கிறேன்! 

-இசாம் மரிக்கார்

Post a Comment

0 Comments