ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ஏ.ஆர். ஏ ஹாபிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு யார் எம்.பியாக நியமிக்கப்படப் போகிறார் என்ற விடயத்தில் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அவர்களைத் தவிர ஏனையோர் அனைவரது நெஞ்சுக்குள்ளும் டிக்..டிக்.. என அடிக்கும் ஒரு விவகாரமாக இது இன்று மாறியுள்ளது.
இந்தப் பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் தங்களுக்கு இது கிடைக்குமா என்ற ஆதங்கம், எதிர்பார்ப்பில் உள்ள அதேவேளை, கட்சியை ஆதரிக்கும் பொதுசனத்தாரிடையே இவரைத்தான் நியமிக்க வேண்டும்.. இவரை நியமிக்கவே கூடாது என்ற கருத்துகளும் உலாவுகின்றன.
எனவே கீழ்வருவோரில் யாரை தேசியப்பட்டியல் எம்பியாக நியமிக்கலாம் என்பதனை எனது முகநூல் நண்பர்கள் தங்களது கருத்தாகப் பதிவிடலாம்.அதே போன்று எவரை நியமித்தாலும் இவரை நியமிக்கவே கூடாது என்ற தரப்பில் வாதம் புரிவோரும் யாரை நியமிக்கக் கூடாது என்பதனையும் மறைவின்றி பதிவிடுங்கள்.
1. எம்.ரி. ஹஸன் அலி (கட்சியின் செயலாளர்)
2. பஷீர் ஷேகு தாவூத் (கட்சி தவிசாளர்)
3. தௌபீக் (திருமலை முன்னாள் எம்.பி)
4. அப்துர் ரஹ்மான் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments