Subscribe Us

header ads

நவீன உலகை மிரட்டும் “சூனியக்காரி”: இது கதை அல்ல நிஜம் (படங்கள் இணைப்பு)

பெல் விட்ச் வரலாற்றுக் கதை, நிஜமான சம்பவங்கள், த்ரில்லான பதட்டம், புதிரான திருப்பம், புரியாத குழப்பம், முடியாத தொடர்ச்சி என கற்பனை கதையை மிஞ்சினாலும் நிஜத்திற்கான தடயங்கள், ஆதாரங்கள் நவீன உலகையும் மிரட்டி வருகிறது.

கேட்பவர்களை ரசிக்கவும் திகைக்கவும் தூண்டும் இருநூறு ஆண்டு பழமையான இந்த கதை யாராலும் அனுமானிக்க முடியாத இயல்புடையது.

கதைக்கு வருவோம்
வடக்கு கரோலினாவை சேர்ந்த ஜான் பெல், தனது மனைவி குழந்தைகளுடன் வடக்கு ராபர்ட்சென் உள்ளூர் டென்னிஸியில் 1804 ல் குடியேறினார்.
அங்கு அவருக்கு 320 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் சிவப்பு ஆறினை (Red River) ஒட்டி இருந்தது. ஒரு விவசாயியாக 13 ஆண்டுகள் அமைதியாக வாழ்ந்த அவர் அப்பகுதியின் தேவாலயத்திலும் உறுப்பினராக இருந்தார்.
அவர் வசித்த வீடு ஒரு தனிமையில் இருந்தது. 1817 ல் ஒரு கோடைகாலத்தின் பின்னிரவில் வீட்டைச் சுற்றிலும் வித்தியாசமான சப்தங்கள் கேட்டுள்ளது.
மேலும், கதவு, வீட்டின் சுவரை தட்டும் ஓசைகள் அடுத்தடுத்த நாள் இரவிலும் கேட்டுள்ளது. பிறகு, வீட்டிற்குள்ளும் விதவிதமான ஒலிகள் கேட்டுள்ளது.
அர்த்தசாமத்தில் இப்படி அடையாளம் இல்லாமல் எழுந்த ஓசைகள், பெல் குடும்பத்தினரை அச்சுறுத்தியது.
தரையிலும், கூரையிலும் கற்கல் விழுந்துள்ளது, விழுங்குதல், கீச்சிடுதல், சங்கிலி உராய்தல், எலிகள் ஓசையென ஒரு வருடம் வரை சேட்டைகள் படையெடுப்பை சமாளித்து வந்தனர்.
பிறகு, அண்டை வீட்டாரான ஜேம்ஸ் ஜான்சனிடம் இந்த புதிரான, கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தியின் சேட்டைகள் பற்றி பெல் பகிர்ந்துகொண்டார்.
அதன் விளைவாக, ஜான்சன் ஜான்சனின் மனைவியும் பெல் வீட்டில் பலநாள் இரவு தங்கி அதை கவனித்தனர்.
அவர்களாலும் அதை உணரமுடிந்தது. ஜான்சன் குடும்பத்திற்கு தெரிந்த பிறகு, அது பலருக்கும் பரவியது. அதைத்தான் அவர்களும் விரும்பினர். அதை ஆராயும் பணி ஒரு அமைப்பாக தொடர்ந்தது.
போதுமான மக்கள் கூட்டம் திரண்டு பல விதமான அடையாளங்களில் ஓசை எழுப்பியதை கூர்ந்து கவனித்தது.
அதில் ஒருவர், அது அருகாமையில் வசிக்கும் ’கேட் பாட்’ என்ற சூனியக்காரிதான் என்று கூறினார். மக்களும் நம்பினர்.
அதன்பிறகு, இந்த கண்ணுக்கு புலப்படாத வினோத ஓசைகள் ”கேட்” என்றும் ’பெல்ஸ் விட்ச்’ என்றும் பேசப்பட்டது.
பெல் குடும்பத்தை துன்புறுத்த இரண்டு காரணங்கள் கேட் சூனியக்காரியால் சொல்லப்பட்டது. 1. ஜான் பெல்லை கொல்வது 2. ஜான் பெல்லின் இளைய மகள் பெட்ஸி, அருகாமையில் வசிக்கும் யோஸுவா கார்ட்னர் என்பவனை திருமணம் செய்வதை தடுப்பது. ஆனால், இதற்கான காரணங்களை கேட் கூறவில்லை.
இத்தனை பிரச்சனைக்கு பிறகும் பெல் குடும்பம் அங்கேயே வாழ்ந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் கேட், பெல் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே தோன்றவும் செய்தாள். கேட்’டின் துன்புறுத்தல் அதிகமானது.
பெட்ஸியின் தலைமுடியை பிய்ப்பது, அடிப்பது, ஊசியால் முகம் மற்றும் உடம்பு முழுதும் குற்றுவது, பெல்லுக்கும் தொண்டையை நெரிப்பது, தொண்டை வீக்கம், தொண்டையில் குச்சி மாட்டிக்கொண்டது போன்ற உணர்வு, அடிக்கடி மயக்கம், சோர்வு, தூக்கமின்மை என உடல் ரீதியாக இருவரும் துன்பப்பட்டனர்.
தலையே வெடிக்கும் அளவில் அச்சுறுத்தப்பட்டதால் மிகவும் பலவீனப்பட்டனர்.
கேட் பண்ணைக்கு வந்த நோக்கம் ஒருவழியாக நிறைவேறியது ஜான் பெல் 1820 ம் ஆண்டு டிசம்பர் 20 ம் திகதி இறந்தார்.
கேட் மக்களால் நன்கு அறியப்பட்டாள். பெல் இறப்புக்கு அவளே காரணம். அவள் மிகவும் புத்திசாலி என்பதை பைபில் படித்தவர்களும் எதிர்காலம், கடந்தகாலம் பற்றி தெரிந்தவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அவள் ஒரே நேரத்தில் பல மைல் தூரத்தில் இரண்டு இடங்களில் இருக்க தெரிந்தவள்.
பெல்லின் இறப்புக்கு பிறகு, யோசுவா கார்ட்னருடனான பெட்ஸியின் திருமண நிச்சயத்தை மார்ச் 1821ல் முறித்துக்கொண்டனர்.
கேட்’டுக்கு மக்களிடம் நன்மதிப்பு கூடியது. அவள் கூறிய சில எதிர்கால கணிப்புகளும் பலித்தது. பிறகு, அவள் மக்களிடம் விடைபெறுவதாகவும் அடுத்த 7 ஆண்டுகள் 7 நாட்களில் திரும்ப வருவதாகவும் கூறி சென்றாள்.
சொல்லியபடி 1928 ம் ஆண்டு மீண்டும் அங்கு வந்தாள். ஜான் பெல் மகனோடு வீட்டில் நீண்ட நேரம் பேசினாள். ஆனாலும், பெல்லை கொன்றதற்கான காரணத்தை மட்டும் சொல்லவில்லை.
மீண்டும் 107 ஆண்டுகள் கழித்து வருவதாக கூறிச் சென்றாள். அந்த கணக்குப்படி 1935 ம் ஆண்டில் அவள் வந்திருக்க வேண்டும். வந்ததற்கான கதை இல்லை.
ஆனால், மக்கள் அவள் எங்கும் செல்லவில்லை, இங்குதான் நம்மோடு, இந்த ஆடம்ஸ் நகர் மற்றும் பெல்ஸ் விட்ச் குகையில் வாழ்கிறாள் என கூறினர்.
அந்த பகுதியில் தோன்றிய குகை போன்ற மாற்றங்களுக்கு கண்ணுக்கு தெரியாத அவளே காரணம் என நம்புகின்றனர்.
இந்த சம்பவங்கள் டென்னிஸி, பெல்ஸ் விட்ச் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி பல கதைகள் அங்கு உள்ளன. இன்றளவும் பள்ளிகளிலும் ’பெல்ஸ் விட்ச்’ பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
ஜான் பெல் கொல்லப்பட்டதற்கான காரணம் புரிந்தால், கேட் ஒரு தர்ம தேவதையா? தகாத தேவதையா? என்பது இன்னும் தெளிவாகும்.
bell_witch_002

bell_witch_003
bell_witch_004

Post a Comment

0 Comments