Subscribe Us

பெண் வேடத்தில் சென்றவர் துப்பாக்கி முனையில் 30 இலட்சம் ரூபாவை கொள்ளை

பேருவளை பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றுக்குள் நுழைந்த நபரொருவர் நிறுவன முகாமையாளரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 30 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

குறித்த நிறுவனத்திற்குள் பெண் வேடத்தில் நுளைந்த நபரொருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடபட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 


நிறுவனத்தின் ஏனைய ஊழியர்கள் அலுவல்கத்தில் இல்லாத நிலையில் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இந்த கொள்ளை நடந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். 


இதேவேளை சம்பவத்தின்போது அதிர்ச்சிக்குள்ளான முகாமையாளர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஷ கூறினார்.

Post a Comment

0 Comments