தெமட்டக்கொடை, பேஸ்லைன் வீதியின் மவுன்ட் மேரி பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் சிறுமியின் பூதவுடல்கள் நேற்று அவர்களது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மஞ்சள் கடவையில் பாதை மாறிக்கொண்டிருந்த தாயும் அவரது மகளும் , 15 வயதான சிறுவன் செலுத்திய காரில் மோதி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனர்.
தனது தாய் மற்றும் சகோதரி உயிரிழந்தமையால் தற்போது அநாதையாக்கப்பட்டுள்ள யுவதி , தனது உறவுகளின் மரணத்துக்கு நியாயத்தைப் பெற்றுத்தருமாறு கண்ணீர் மல்க கோரியுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனின் தாய்க்கு பிணை கோரி முன்வைக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதவான் , பிணை வழங்க மறுத்துவிட்டார்.
மேலும் 35 வயதான குறித்த பெண்ணை எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் 15 வயதுடைய சிறுவனும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


0 Comments