Subscribe Us

header ads

மைத்திரியை விரட்டியடிக்க மஹிந்தவின் சூழ்ச்சி அம்பலம்

இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிராக புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.

இது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எட்டும் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நடவடிக்கையால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை புலனாய்வுத்துறையினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவ்வாறான உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குழுவினர், தேசிய சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி உட்பட கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் இணைந்து புதிய முன்னணி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமாக செயற்படுகின்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments