Subscribe Us

header ads

தனியார் மருத்துவ மனைகளில் வெளிநாட்டவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தடை


இந்த நாட்டு தனியார் மருத்துவ மனைகளில் வெளிநாட்டவருக்கு இடம் பெறும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளை தற்காலிகமாக இடை நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இந்த நாட்டு மருத்துவர்கள், ஆறு பேர் சீறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபால எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments