Subscribe Us

header ads

ஹம்பாந்தோட்டையில் சீனக்கப்பல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது: பிரதமர் ரணில்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படை தளமாக பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்யுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்

இலங்கையின் முன்னாள் அரசாங்கம் பதவியில் இருந்தகாலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்டமையானது இந்தியாவுக்கு தெரிந்தவிடயமே என்றும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

எனினும் சீன கடற்படை கப்பல்களின் தளமாக அது பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்தியா உட்பட்ட ஏனைய பல நாடுகளும் ஹம்பாந்தோட்டை முறைமுகத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments