Subscribe Us

header ads

மைத்திரியை சந்தித்த நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அசௌகரியங்களை ஏற்படுத்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமானது என்றும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது தனது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஐந்தாறு விசாரணைகளை எதிர்கொண்டுவிட்டதாகவும் நாமல் ரரஜபக்ச மைத்திரிக்கு கவலை தெரிவித்துள்ளார். 

இதேவேளை தம்முடன் இணைந்து செயற்பாடுமாறு இதன்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாமலிடம் கேட்டுக்கொண்டுள்ளார் அதற்கு நாமல் ரரஜபக்ச ஆதரவு தருவதாக கூறியுள்ளதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் மேலும் கூறுகின்றது.

Post a Comment

0 Comments