சுகமான வாழ்விற்கு உடற்பயிற்சி என்ற தொனிப்பொருளின் கீழான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வாரம் இன்று ஆரம்பமானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் விரைவாக அதிகரித்துச் செல்லும் தொற்றாநோய்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் அனைத்து அமைச்சுக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

0 Comments