முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டாலும் அவர் குற்றவாளியல்ல எனவும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மாத்திரமே குற்றவாளியாக முடியும் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி, பெலிகஹாவில் புதிய நீதிமன்ற கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதை பார்வையிட நேற்று சென்றிருந்தார். அப்போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அல்லது தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தாலும் ஏதேனும் தவறு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டால், நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
விசாரணை நடத்த வேண்டியது பொலிஸாரின் கடமை. நாங்கள் அதில் தலையிட மாட்டோம். அதேபோல் 10 வருடங்களுக்கு பின்னர் சுயாதீனமான நீதித்துறை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தமாக நடத்தப்படும் சகல விசாரணைகளும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்புக்கு எந்த அழுத்தங்களும் ஏற்படாது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை அவர் குற்றவாளி அல்ல எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


0 Comments