அகில இலங்கை YMMA பேரவையினால் வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர் தர முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் பொருளாதார வசதிகுறைந்த, திறமையுள்ள மாணவா்களுக்கான புலமைப் பரிசில் இவ்வருடமும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பாதாரா் 2014 டிசம்பா் க.பொ.தா. (சாதாரண தரப்) பரிட்சைக்கு தோற்றி குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் 1A வுடன் கணிதம், இஸ்லாம் பாடங்கள் உட்பட, 6 பாடங்களில் சித்தியடைந்து இருந்தால் வேண்டும்.
இத்தகுதியை உடையவா்கள் உங்கள் பகுதிகளில் இயங்கும் YMMA காரியாலயங்களில் இருந்தும் அல்லது www.ymma.lk என்ற இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்படிவங்களை பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ள முடியும்.
குறிப்பு: இப்புலமைப்பரிசில் ஸகாத் பெற தகுதியான மிகவும் வறிய மாணவா்களுக்கு வழங்கப்படுவதனால் ஸகாத் பெற தகுதியானவா்கள் மாத்திரம் விண்ணப்பிக்கும் படி பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
விண்ணப்ப படிவங்களை ஒழுங்கான முறையில் பூா்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் போட்டோ கொப்பி பிரதிகளுடன் அண்மையிலுள்ள அங்கத்துவ YMMA காரியாலயங்களில் உறுதி செய்யப்பட்டு எதிர்வரும் 2016.01.30ம் திகதிக்கு முன்னா் கீழ்க்காணும் முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
National General Secretary,
All Ceylin YMMA Conference
No. 63, Sri Vajiragnana Mawatha,
Colombo-09
மகாரிம் ஏ. தாஹா.
தேசிய பொதுச் செயலாளா்.
ஏனைய விபரங்களுக்கு 0112-694075/0777-391691 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடா்பு கொள்ளவும்.
(YMMA யினது அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் போன்றவை JPEG வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. இவை தெளிவாக இல்லையென்றால் E-Mail ஐடி யை கம்மான்ட் பாக்ஸில் தாருங்கள். PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும்.)





0 Comments