Subscribe Us

header ads

சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்

சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்ப முடியாமல் திணறியதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பயணிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் உயரக் கிளம்ப முடியாமல் திணறியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தகுறை நிவர்த்தி செய்யப்பட்டதும் அதே விமானம் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மேற்படி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட 160 பயணிகளும் சென்னையில் உள்ள பல்வேறு ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments