எமது உடல் ஆரோக்கியத்தைபேன தினமும் அரைமணி நேரம் நடந்தால் மட்டுமே போதும், அந்த உடற்பயிற்சியின் மூலம் எமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
விளையாட்டு, உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு திருகோணமலை, கிண்ணியா வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஊர்வலம் இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
உலகளாவிய ரீதியில் மிக அதிகமாக பெண்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் இவர்கள் நாளாந்த உடற்பயிற்சிகளில் ஈடுபாடு காட்ட அக்கரை கொள்ளாமலும், அவர்களின் வீட்டு வேலைகள் மற்றும் கணவன், பிள்ளைகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுவதால் நேரமின்மை இல்லாது போவதனாலும் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப்பேன மறந்து செயற்படுகின்றனர்.
அதற்கு ஆண்களாகிய நாம் பெண்களையும் உடற்பயிற்சி செய்யத் தூண்டுவதுடன் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேனுவதற்காக தக்க நேரங்களையும் நாம் ஒதுக்கிக் கொடுக்கவேண்டும். எமக்காக கஷ்டப்படுகின்றவர்களை நாம் பாதுகாத்து வந்தால் எமது பணிகள் எப்போதும் மன நின்மதியுடன் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றார்.
கிண்ணியா பாலத்தடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி உடற்பயிற்சி சுமார் 3 கிலோ மீற்றர் தூரம்வரை வீதி ஊர்வலமாகச் சென்று கிண்ணியா வைத்திய அதிகாரி காரியலயத்தில் முடிவுற்றது.
இந்த வீதி நடை உடற்பயிற்சியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன், கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.முருகாணந்தம், மாகாண பிரதிப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட வைத்தியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
0 Comments