ஆசிய வெற்றி கிண்ண போட்டிக்கு முன்னதாக இந்தியாவும் இலங்கையும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன.
உலக இருபதுக்கு 20 வெற்றி கிண்ணத்தை பெறுவதில் இரு அணிகளும் பெரும் ஆர்வத்தை கொண்டுள்ள நிலையில், இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
முதலாவது போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி புனேயில் இடம்பெறவுள்ள அதேவேளை, இரண்டாவது போட்டி பெப்ரவரி 12ஆம் திகதி புது டெல்ஹியில் நடைபெறவுள்ளது.
மூன்றாவது போட்டி விசாகபட்டினத்தில் பெப்பிரவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு நடந்த இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டியில் கலந்து கொண்டதன் பின்னர் நடைபெறும் போட்டித் தொடர் இதுவாகும்.
இறுதியாக நடந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments