உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை பரிசோதிக்கும் வடகொரியா. ஒரு புதுவகையான மதுபானத்தை கண்டுபிடித்திருப்பதாக இப்போது அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மதுபானத்தை குடித்தால் அடுத்தநாள் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படாது என வடகொரியா கூறுகிறது.
அதிகளவில் மருத்துவ குணங்கள் கொண்ட ஜிங்செங் மூலிகை, ஈரமில்லாத அரிசி ஆகியவற்றை கொண்டு இந்த ‘கோர்யோ’ மது தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடகொரியா விஞ்ஞானிகள் ‘கும்டாங்-2’ என்ற ஊசி மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், அது எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணமாக்கும் என கூறியதும், நினைவுகூறத்தக்கது.


0 Comments