Subscribe Us

header ads

"தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களுக்காக நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதி நான் இல்லை" - ஜனாதிபதி


புதிய அரசியல் யாப்பினை சமப்பித்தது அல்லது தற்போது காணப்படும் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதில் மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பீ.பீ.சி செய்தி சேவை நேர்காணலின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களுக்கு அமைய நாட்டை ஆட்சி செய்வது தமது எண்ணம் இல்லை என குறிப்பிட்ட அவர் , மேலும் அரசாங்கத்தினுள் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுவதால் அரசில் பிளவு ஏற்பட்டுள்ளது என கருத முடியாது என தெரிவித்தார்.

தமது ஜனாதிபதி பதவியின் ஒரு வருட காலப்பகுதியில் சர்வதேசத்தை வெற்றி கொள்ள முடிந்தது தமது பாரியளவிலான வெற்றி என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments