Subscribe Us

header ads

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி (Youth Empowerment Program - YEP)



க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பினால் (ஜம்இய்யதுத் தலபா) நடாத்தப்படும் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி (Youth Empowerment Program - YEP) இம்முறையும் நாடளாவிய ரீதியில் மிகச் சிறப்பாக நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பதனை களம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

இம்முறை வரலாற்றில் முதற் தடவையாக காலி மாவட்டத்திலும் இந்த நிகழ்ச்சியை கா/ கந்தவத்த அல்மீரான் பாடசாலையில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பதனை சந்தோசத்துடன் அறியத் தருகிறோம். Jamiyya Galle வின் அயராத முயற்சியினால் காலியில் முதன் முதலாக நடாத்தப்படும் இந்த நிகழ்ச்சி பூரண வெற்றியளிக்க வல்ல இறைவனைப் பிராரத்திக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். கூடவே, காலியில் இன்சா அல்லாஹ் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு உடலாலும், நிதியாலும் பங்களிக்க விரும்புபவர்கள் சகோதரர் Nazreen Nawfalஅவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். 

ஜம்இய்யாவின் நாடளாவிய கிளைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி மற்றும் ஆன்மீக செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், அதனுடன் இணைந்து பணியாற்றவும் பின்வரும் ஜம்இய்யா கிளைகளின் முகநூல் கணக்குகளை லைக் செய்து கொள்ளுங்கள். 

-Rasmy Galle-

SLISM - SEU - Operational Team

Post a Comment

0 Comments