Subscribe Us

header ads

மன்னார் மரிச்சிக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி கிராமங்களுக்கான தனித்த பிரதேச சபைக்கான கோரிக்கை தொடரும்.


தனித்த பிரதேச சபைக்கான பிரச்சாரம் தொடரும் Will continue to campaign for a separate Divisional council for Mannar Marichchikatti
மன்னார் மரிச்சிக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி மற்றும் அதனை அண்மித்த கிராமங்களை உள்ளடக்கிய தனித்த பிரதேச சபைக்கான கோரிக்கை நடந்துமுடிந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே கோரப்பட்டிருந்தது.
கடந்த பொதுத்தேர்தலில் இந்த கோரிக்கைக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்ற வாக்கிறுதியும் பெறப்பட்டது. புதிய அரசாங்கம் அமையப்பெற்ற பின் வேறு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கும் போது அரசின் மீது பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த அரச நிறுவாகத்தின் போது வறுமைகோட்டில் வாடிய கிராமங்கள் இந்த அரசிலும் அதே கதியோ என்று சிந்திக்கும் போது சோகம் உச்சிக்கடிக்கிறது.
இத் தனித்த பிரதேச சபைக்கான கோரிக்கை குறித்து இப்பிரதேச மக்களும் எங்களுடன் சேர்ந்து பணிக்க அன்பாய் அழைக்கிறோம்.
நீண்ட பல தசாப்தங்களாக வறுமையில் வாடும் எங்கள் கிராமங்களை மிக அவசர அவசியமாக கட்டியெகழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான ஒரே தீர்வாக இந்த தனித்த பிரதேச சபைக்கான சிந்தனை முன்வைக்கப்படுகிறது.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


Post a Comment

0 Comments