![]() |
File Picture |
காதி நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் காலம் காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் அது தொடர்பில் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அவர்களுடைய இமசைகளும் அடாவடித்தனங்கள் குறைந்த பாடும் இல்லை. நான் இங்கே குறிப்பிடுவது Mr. Abdul Marzook காதி நீதிவானாக செயல்படும் (கொழும்பு 12 வடக்கு ) நீதிமன்றத்தைையே....
நேற்று முந்தினம் ஒரு தாய் என்னிடம் வந்து முறையி்ட்ட போது இது தொடர்பில் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
விவாகரத்துப் பெறுவதற்காக மக்கள் காதி நீதிமன்றங்களை நாடுவதுண்டு. அதிலும் விஷேடமாக பெண்கள் இந் நீதிமன்றங்களிலே கையாளு்ம் விதம் மிகவும் கவலைக்குறிய விடயமே..
ஆண்களுக்கு பக்கச் சார்பாக நடந்து கொள்ளுதல்.
பெண்களிடத்தில் தரக் குறைவான வார்த்தைகளைக் உபயோகித்தல், அவர்களை அவமரியாதையாக .நடத்துதல்.
உரிய காரணமின்றி் நீதிமன்ற நடவடிக்கைகளை காலவரையின்றி நீடித்துச் செல்லுதல்.
விவாகரத்துப் பெற்ற சான்றிதழை (Divorce Certificate)உரிய நேரத்திற்கு பெற்றுக் கொடுக்காமல் காலம் தாழ்த்துதல்.
பெற்றோரிடத்திலிருந்து உரிய பராமரிப்புத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு தாவையான உதவி ஒத்தாசைகளை பெற்றுக் கொடுக்காமை அல்லது காலம் தாழ்த்துதல்.
இது போன்ற பல குற்றச்சாட்டுள் காதி நீதிபதிகள் மீதும் நிதிமன்றங்கள் மீதும் குற்றம் சுமத்ப்படுகின்றது.இது தொடர்பில் உடனியக நடவடிக்கைகல் எடுக்கப்பட வேண்டும்.
-Deen Noor Nagoor Kani-
0 Comments