
கடந்த பல வருடங்களாக வடக்கில் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றத்தை தடை செய்யும் பணியினை இனவாத சிந்தணைகளைக் கொண்ட கட்சிகளும்,அமைப்புக்களும்,அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலையினை அடைந்தவர்களும் மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை இலக்கு வைத்து இந்த இனவாதிகள் மேற்கொண்டுவரும் விசமத்தனமான பிரசாரங்கள் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாததொன்று,இது போன்று தான் இந்திய வீடமைப்பு திட்டத்தில் தமிழ் சகோதர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அனைத்துவீடுகளும் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களும்,சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கைகளை விட்டும்,ஆர்ப்பாட்டங்களையும் செய்து வந்த போது,நாம் இந்திய அரசாங்கத்தின் அன்றைய இலங்கைக்கான துாதுவராக இருந்த அசோக் கே கான்த்தா அவர்களை வவுனியா நெல்லி உணவகத்தில் சந்தித்து எமது மக்களின் நிலைப்பாட்டினை விளக்கப்படுத்திய போது அதனை ஏற்றுக்கொண்ட அவர் விசமத்தனமான பிழையான தரவுகளை வெளியிட வேண்டாம் என்று தமிழ் கூட்டமைப்பினரிடத்தில் வேண்டிக்கொண்டதை நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.இதன் மூலம் அவர்களது போலியான முகமூடிகள் கிழித்தெறியப்பட்டன.
இதே போன்று இன்னும எத்தனையோ விடயங்களில் இந்த இனவாதிகள் கடும்போக்குத்தனத்துடன் செயற்பட்டார்கள்.இது இவ்வாறு இருக்கையில் மன்னார் மாவட்டத்தில் முசலி மற்றும் பெறியமடு பகுதிகளில் மீண்டும் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறவந்த போது,அவர்கள் காடுகளை அழிக்கின்றார்கள் என்று அப்பட்டமான பொய்யினையும்,கட்டுக் கதையினையும் புணைந்து இங்கிருந்து மீண்டும் இந்த முஸ்லிம்களை வெளியேற்ற முயற்சித்தனர்.ஆனால் இறைவனின் நாட்டத்தால் வன்னி மாவட்ட ஏகோபித்த மக்களின் அரசியல் தலைவரான றிசாத் பதியுதீன் அவர்களின் துணிவான செயற்பாடும்,நேர்மையான அனுகுமுறைகளும் அந்த சக்திகளை மண்டியிடச் செய்தது,சில காலம் ஓய்வு பெற்றிருந்த இனவாதிகள் மீண்டும் முஸ்லிம்கள் வில்பத்து காட்டினை பிடிப்பதாக மதற்றுமொரு நாடகத்தைினை அரங்கேற்றினர்.
இந்த நாடகத்தின் பிரதான பாத்திரத்தை தனியார் தொலைக்காட்சி பொறுப்பெடுத்திருந்தது.இந்த நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக கைபற்றியதாக கூறிய வடமாகாண சபையும்,இவ்விடயத்தில் அந்த சக்திகளுக்கு சோரம் போயிருந்ததை நாம் கூறியாக வேண்டும்.
சூழலியளார்கள் என்று கூறுபவர்கள் பலர் இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க எத்தனையோ வேளைகளை செய்தார்கள்,ஆனாலும் உண்மை எங்கு இருக்கின்றதோ,அங்கு வெற்றி இருக்கின்றதை இறைவன் நிருபித்துகாட்டிவருகின்றான்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ”அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு முஸ்லிம் என்பதால் தான் இனவாதிகள் முஸ்லிம்களின் குடியேற்றத்தினை வில்பத்துகாட்டுக்குள் இடம் பெறுவதாக பொய்யுரைக்கின்றனர்.நான் காணி அமைச்சராக இருந்த போது இந்த இனவாதிகள் எதையும் சொல்லவில்லை,வடக்கில் இருந்து புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அவர்களது தாயகத்தில் குடியேற செல்வதை எவரும் பிழையென்று கூறமுடியாது,அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவே இடம் பெற்று இருக்கின்றது. என்ற விடயத்தை வலியுறுத்தி கூறியதன் மூலம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் இருந்து வந்த சந்தேக அகன்றுள்ளது.
இந்த வகையில் அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்தினையும் மேலோங்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் இந்த பிரகடனம் அமைந்துள்ளதை வடபுல முஸ்லிம் சமூகம் தமது பாராட்டினை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு தெரிவிப்பதாக வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
பேருவளை அளுத்கம சம்பவத்தின் போதும்,உண்மைக்காக உரத்து குரல்கொடுத்தவர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிடுவதும் பொருத்தமாகும்,இந்த வகையில் இந்த நாட்டில் உள்ள அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் திறந்த மனதுடன் பேசும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் இந்த செயற்பாடு தான் எமது நாட்டுக்கு தேவையெனவும் அப்துல் பாரி தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதுடன்,இன்னும் முஸ்லிம்களுக்குள்ளும் ஊடுறுவி பெயர் தாங்கி செயற்படும் சில வங்குரோத்து அரசியல் வாதிகள் இனியும் இவ்வாறான அசிங்கத்தை செய்ய வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.மக்களால் தேர்தலில் புறிக்கணிக்கப்பட்ட உங்களால் எதையும் இந்த மக்களுக்கு செய்ய முடியாது என்பதை மனதில் கொண்டு முஸ்லிம்,தமிழ்,சிங்களவர்கள் என்ற பேதமின்றி செயற்படும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் மாவட்டத்தின் அபிவிருத்தியினை கட்டியெழுப்ப அணிதிரளுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் அப்துல் பாரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments