முஸ்லீம் நபர் ஒருவர் வீடற்ற மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய காட்சியினை வீடியோ எடுத்து யூடியுபில் வெளியிட்டுள்ளார்.
Rambo Vlogs என்ற அந்த முஸ்லீம் நபர், போர்வைகள் அடங்கிய சில பரிசுப்பொருட்களை வீடற்ற நிலையில் தெருவில் வசிக்கும் சிலருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இதனை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் அன்பினை மக்களிடையே பரப்ப வேண்டும் என்று நினைத்தேன்.
மேலும் வீடற்றவர்களின் வாழ்க்கை நியாயமற்றதாக உள்ளது, எனவே கிறிஸ்துஸ் பரிசுப்பொருட்களை பகிர்ந்து அன்பினை தெரியப்படுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் பாரீஸின் தெருவில் நின்றுகொண்டு, நான் ஒரு முஸ்லீம், என்னை கட்டியணையுங்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments