பிரான்ஸ் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்களை சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் அங்கிருந்த குரான் புத்தகங்களையும் எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
பிரான்ஸின் Corsica தீவில் உள்ள Ajaccio என்ற நகரில் தான் பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையான நேற்று உலக மக்களின் அமைதிக்காக அனைத்து மதத்தினருக்காகவும் சுமார் 150 இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு கும்பல் தொழுகையில் இருந்த இஸ்லாமியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
‘இது எங்கள் தாய்நாடு. இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என கோஷங்கள் இட்டவாறு அவர்களை தாக்கியுள்ளனர்.
கும்பலின் ஒரு பிரிவினர் தொழுகை கூடத்திற்கு உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் பதிப்புகளை பறித்து வந்து வீதியில் வீசியுள்ளனர்.
கும்பலில் சிலர் பதிப்புகளில் சிலவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 50 பதிப்புகள் எரிந்து நாசமாயுள்ளன.
இஸ்லாமியர்கள் எதிர்ப்பாளர்களின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிரான்ஸ் நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் கடுமையாக கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் மீதான இந்த மதவெறி தாக்குதலை கண்டித்த பிரான்ஸ் உள்துறை பாதுகாப்பு அமைச்சர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

0 Comments