கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்கு விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு “டஸ்ட் ஒபரேஷன்” என பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம், கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு என்பன ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றது.
இதன்படி, கொழும்பு நகரில் பல்வேறு பிரதேசங்களில் சிவில் உடையில் நடமாடும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நபர்கள் தொடர்பில் இந்தப் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
எவருடையவாவது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பின், உடன் அவர் கைது செய்யப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட தினங்களில் கொழும்பின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.


0 Comments