புத்தளம் மாவட்டம் என்பது ''மீன்பிடிக்கு'' பெயர் போன ஒரு மாவட்டம் ஆகும்.
அதிலும் குறிப்பாக கல்பிட்டி பகுதி மக்கள் வருடம் தோறும் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் . காரணம் இவர்களுக்கு இரண்டு கடல்களும் வாய்ப்பாக அமைந்துள்ளமை .
ஆனால் , துரதிஸ்ட்ட வசமாய் இவர்கள் இரவு பகலாய் மேற்கொள்ளும் இப்பணிக்கு உரிய சன்மானம் கிடைப்பதில்லை , மேலும் வேதனை என்னவெனில் இந்த ''மீன்பிடி மக்கள்'' கூட இதுவரை காலமும் இதனை உணரவில்லை .
அதாவது இவர்கள் உடலை வருத்தி பிடிக்கும் இந்த மீன்களை இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் வரும் ''கொள்வனவாளர்கள்'' நினைத்த விலைக்கே கொள்வனவு செய்கின்றனர் . குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விலைகள் .
ஆக , இதனை கருத்தில் கொண்டு இவர்கள் பிடிக்கும் மீன்கள் அனைத்தும் ஒரு இடத்திற்கு வந்து , அந்த இடத்தில் இருந்து வியாபாரிகளுக்கு வழங்கப்படும் ''சந்தை பொறிமுறை'' ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் .
உதாரணமாய் நுரைச்சோலையில் அமைந்துள்ள ''மரக்கறி சந்தை'' போன்று மீன் சந்தை ஒன்றும் அமையுமாயின் ''மீனவர்கள் , கொமிசன் வியாபாரிகள், கூலி தொழிலாளிகள் , வாகனம் வைத்திருப்போர்'' என்று பலருக்கு நன்மையாய் போகும் , பலருக்கு பொருளாதாரமும் பெருகும் .
கல்பிட்டி தொடக்கம் முந்தல் , மற்றும் புத்தளம் நகர் பகுதி என்று மிகப்பெரிய எல்லைக்குள் மீன்பிடி நடைப்பெறுவதால் பொருத்தமான இடம் ஒன்றை தேர்வு செய்து இதனை அமைக்க முடியும் .
ஆக , நமது பகுதி அரசியல்வாதிகள் இதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று அன்பாய் வேண்டுகிறேன் ...
-Mohamed Infass-


0 Comments