Subscribe Us

header ads

11 ஆம் தரத்திற்கு புதிய பாடத்திட்டம்

முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய கற்கை நிறுவனம் தெரிவிக்கின்றது.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் 7 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பிள்ளைகளால் கிரகிக்கக்கூடிய மற்றும் செயற்பாட்டு ரீதியில் பிள்ளைகளை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் புதிய பாடத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கற்கை நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.

Post a Comment

0 Comments