நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.சீ. விக்ரமசேகர இதனை தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் பிரிவின் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான இயந்திரம் நேற்று மாலை முதல் செயலிழந்திருந்ததன் காரணமாக மின் உற்பத்தியில் தடை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியிருந்ததன் காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகமாக இருந்துள்ளது.
இதன் காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையம் மூடப்பட்டதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கியில் பழுது பார்க்கும் நடவடிக்கைக்கு அதிக நாற்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது மின் பிறப்பாக்கி பழுதாகி இரண்டு வாரம் கடந்துள்ள நிலையில் குறித்த இயந்திரம் இது வரையிலும் சரி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments