பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட மேலும் சிலர் பயணமாகியுள்ளனர்.
எமிரேட்ட்ஸ் விமானமான EK 651 பயணிகள் விமானத்தில் இன்று காலை 10.20 க்கு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பயணமானதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸை ஜனாதிபதி நாளை சந்திக்கவுள்ளதாகவும் நாளை மறுதினம் வத்திக்காணி்ல் உள்ள விசேட இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பரிசுத்த பாப்பரசரை சந்திக்கின்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


0 Comments