பாரிஸ் இசையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது மரணத்தை நேரில் சந்தித்ததாக அப்பகுதிக்கு முதலில் வந்த பொலிஸ் அதிகாரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பாரிஸ் நகரில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் கொத்தாக 90 பேர் படுகொலை செய்யப்பட்ட Bataclan இசையரங்கில், தீவிரவாத தாக்குதல் நடைபெற்றபோது துணிச்சலுடன் அப்பகுதிக்கு வந்த பொலிஸ் அதிகாரி தனது அனுபவத்தை முதன்முதலில் பகிர்ந்துள்ளார்.
விளையாட்டு அரங்கின் அருகே வெடிகுண்டு வெடித்துள்ளதாக வந்த செய்தியை அடுத்து சக உத்தியோகஸ்தருடன் அப்பகுதிக்கும் விரைந்துகொண்டிருந்ததாக தெரிவித்த அவர்,
அரங்கிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள Bataclan இசை அரங்கில் இருந்து இளம் வயதினர் பீதியில் அலறிக்கொண்டு வெளியேறுவதை கண்டு இருவரும் உள்ளே நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.
அரங்கின் உள்ளே மயான அமைதி நிலவியதாகவும், நூற்றுக்கணக்கான உடல்கள் குவியலாக ஆங்காங்கே சிதறிக்கிடப்பதையும் கண்டு தாம் கலங்கியதாகவும், பாரிசின் குற்றவியல் தடுப்பு படையின் தலைவரான அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
போதிய கால அவகாசம் இல்லை என்பதை உணர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும், தாக்குதல் நடத்திய தீவிரவாதி கொல்லப்படும் வரை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதி கொல்லப்பட்ட பின்னரும் அச்சுறத்தல் ஓயவில்லை என தாம் எண்ணியதாகவும், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க அப்போது தாம் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அப்பகுதிக்கு சிறப்புப் படையினர் விரைந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தீவிரவாதிகளுடனான சண்டையில் தாம் கொல்லப்படலாம் என அங்கிருந்து தமது காதலிக்கு தொலைபேசியில் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

0 Comments