Subscribe Us

header ads

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தட்டுபாடின்றி வழங்கப்படும்: ரவி கருணாநாயக்க

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய சந்தையில் பொருட்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து கண்டறிய சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படும்.


எதிர்வரும் இரண்டு வார காலத்திற்கு தொடர்ச்சியாக இவ்வாறான சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தின் திட்டங்களை அமுல்படுத்தாது நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பிரச்சாரம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்.

இது தொடர்பிலான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக வாராந்தம் வாழ்க்கைச்செலவு குழு கூடி ஆராய்கின்றது.

சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை அடிக்கடி சுற்றிவளைப்புக்களை நடத்தவுள்ளது என நிதி அமைச்சர் கருணாநாயக்க இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments