சில ஆண்கள், ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு காரணம், அவர்களுக்கு சரியான முறையில் ஷேவிங் செய்ய தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க ஒருசில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.
* ஷேவிங் செய்யும் முன், முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் சுடுநீரில் கழுவினால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகி, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுடுநீரினால் சருமத்திற்கு அருகில் உள்ள சிறு இரத்த நாளங்கள் உடைய வாய்ப்புள்ளது.
* ஷேவிங் ஜெல் அல்லது க்ரீமை கைவிரலால் தடவி, வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும். ஏனெனில் கன்னத்தில் வளரும் முடியானது ஒவ்வொரு திசையில் வளர்வதால், வட்ட வடிவில் தேய்த்து விடும் போது, அனைத்து பகுதியிலும் க்ரீம் பரவி, கன்னங்களில் உள்ள முடி எளிதில் வெளியே வருவதற்கு ஏற்றவாறு வழி செய்யும்.
* பல ஆண்களும் சற்று அழுத்தி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய மார்டன் ரேசர்கள் லேசான அழுத்தத்தைக் கொடுத்தாலே, முடி முழுவதும் வெளியேறக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. அழுத்தம் குறைவாகக் கொடுப்பதால், எரிச்சலும், அரிப்புக்களும் குறையும்.
* தாடியை இன்னும் சௌகரியமாக எடுக்க வேண்டுமானால், சுடுநீர் குளியலை மேற்கொண்ட பின் இறுதியில் எடுக்கலாம். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து மென்மையாக இருக்கும். இப்போது எடுப்பதன் மூலம் தாடியை மிகவும் சுலபமாக நீக்கலாம்.
* சில ஆண்கள் முடி வளரும் திசைக்கு எதிர்திசையை நோக்கி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியேறும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால், சருமத்தில் வெட்டுக்காயங்களுடன், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். எனவே எப்போதுமே முடி வளரும் திசையை நோக்கியே ஷேவிங் செய்யுங்கள்.
* சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஷேவிங் லோஷன் பயன்படுத்தினால், அதனால் மேலும் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் ஏற்படுத்தும். எனவே ஷேவிங் லோசன் பயன்படுத்துவதற்கு பதிலாக கடைகளில் விற்கப்படும் ஷேவிங் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சரும வறட்சியும் தடுக்கப்படும், எரிச்சல் மற்றும் அரிப்பும் வராமல் இருக்கும்.
* ஷேவிங் செய்து முடித்த பின் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோசனில் ஆல்கஹால் இருப்பதால், அது சருமத்தை வறட்சியடைச் செய்வதோடு, எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே ஆஃப்டர் ஷேவ் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆஃப்டர் ஷேவ் பாம் அல்லது மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.
1 Comments
தாடி வளர்த்தல்
ReplyDeleteஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
தாடி வளர்ப்பது நபிமார்களதும், குறிப்பாக இறுதி நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களதும் ஒரு சிறப்பான ‘ஸுன்னஹ்’ ஆகும். இதனை வளர்ப்பது கடமை என்பதையும், சிரைப்பது ஹராம் என்பதையும் பின்வரும் ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன:
‘நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீசைகளை கத்தறிக்குமாறும், தாடியை வளர்க்குமாறும் ஏவினார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் : 259, ஸுனனுத் திர்மிதி, ஹதீஸ் எண் : 2765)
‘இணைவைப்பவர்களுக்கு மாறுசெய்யுங்கள் மீசைகளைத் கத்தறித்துக் கொள்ளுங்கள், தாடிகளை வளருங்கள்’ என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹு முஸ்லிம்)
‘மீசைகளை வெட்டிவிடுங்கள், தாடிகளை வளர விடுங்கள், நெருப்பு வணங்கி (மஜூஸி;) களுக்கு மாறுசெய்யுங்கள்’ என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹு முஸ்லிம்)
தாடியை சிரைப்பது பாரசீகர்களது வழமையான நடைமுறையாகும். இதனை இஸ்லாமிய ஷரீஆ தடைசெய்துவிட்டது. ஹதீஸில் கையாளப்பட்டுள்ள ‘தாடிகளை வளர விடுங்கள்’ என்ற சொற்பிரயோகமும் இதனையே உறுதி செய்கின்றது என்பதுவே பெரும்பாலான மார்க்க அறிஞர்களது தீர்ப்பாகும்’ என்று இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சஹீஹு முஸ்லிமிற்கான தனது விரிவுரை நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஷர்ஹு சஹீஹி முஸ்லிம் : பா : 03, பக் : 151)
‘தாடியை சிரைப்பது ‘மக்ரூஹ் தஹ்ரீம்’ (ஹராம் எனும் தரத்தை நெருங்கியது) என்று இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும், தாடியைச் சிரைப்பது ‘ஹராம்’ ஆகும் என்று இமாம்களான மாலிக், அஹ்மத் (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.
(அத்-துர்ருல் முக்தார் : பாகம் : 02, பக்கம்; : 155,
அல்-ஃபிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹு : பா :04, பக் : 2659)
எனினும், தாடியில் மேலதிகமாக உள்ள பகுதிகளை சீர்செய்து கொள்ளவும் அனுமதி உண்டு. இதனை பின்வரும் தகவல் தெளிவு படுத்துகின்றது:
‘ஹஜ்ஜோ, உம்ராவோ நிறைவேற்றினால் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் தனது தாடியை ஒரு பிடியளவு பிடித்துக் கொண்டு அதிகமுள்ளதை வெட்டிவிடுவார்கள்’.
(அல்-ஃபிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹு : பா : 01, பக் : 462)
தாடியை அது இயற்கையாக எப்படி வளர்கின்றதோ அப்படியே அதனை வளர விடவேண்டும். அதில் ஒரு சிறு பகுதியையும் எடுத்தலாகாது என்று சில அறிஞர்களும், தாடியை சிரைப்பது மக்ரூஹ் ஆகும் என்று வேறு சில அறிஞர்களும் கூறியுள்ளனர்.
அத்துடன் தாடியை ஒரு பிடியை விடக் குறைப்பது ஆகுமானதல்ல என்பதுவே பெரும்பாலான மார்க்கச் சட்ட அறிஞர்களது ஏகோபித்த கருத்தாகும். அவர்களது ஏகோபித்த அபிப்பிராயத்துக்கே ‘இஜ்மாஃ’ என்று சொல்லப்படும். தாடியை வளர்ப்பது கடமை (வாஜிப்) என்பதற்கும், அதனை சிரைப்பது தடுக்கப்பட்டுள்ளது (ஹராம்) என்பதற்கும் மேற்படி ‘இஜ்மாஃ’ வே ஆதாரமாகும் என்று மற்றும் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.