Subscribe Us

header ads

பெண்கள் தினமும் உணரும் பாதுகாப்பின்மை


பெரும்பாலும் பெண்கள் தினம், தினம் பாதுகாப்பின்மையாக உணர்வது அவர்கள் சார்ந்த விஷயத்தில் தான். அவர்களது அன்றாட செயல்பாடுகளில் தான் இவர்கள் மிகவும் அச்சம் கொள்கிறார்கள். சில சமயங்களில் ஆண் அல்லது வேறு துணை இன்றி தாங்கள் செய்யும் வேலைகள் முழுமையாக வெற்றிபெறுமா என்ற அச்சம் பெண்களிடத்தில் இருக்கிறது. 

பெண்களால் சிறு சிறு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நிராகரிப்பு ஏற்படும் சமயங்களில் அவர்கள் செய்யும் சிறு தவறுகள் கூட பூதாகரமாக அவர்களது கண்களுக்கு தெரிகிறது. இதற்கான தீர்வுகள் அவர்களிடத்தில் தான் இருக்கிறது. பெண்களே தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான் தடைகளை தகர்க்கும் ஒரே கருவி. பெண்களால் தாங்கிக்கொள்ள முடியாத விஷயம் தோல்வி. தேர்வில் தொடங்கி, வேலை, காதல் உறவு என பெண்களால் பெரிதாய் தோல்விகளையும், நிராகரிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாது. 

உடனே, ஏதேனும் எதிர்மறை செயல்பாடுகளில் இறங்க தொடங்கிவிடுகிறார்கள். தோல்வி, நிராகரிப்புகளில் இருந்து வெளிவர சில நேரம் எடுத்துக்கொள்ளும். இங்கு தான் பெண்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு உடனே கிடைக்க வேண்டும் என்ற சுபாவம் இருக்கிறது. இதிலிருந்து வெளிவர நேரம் தேவை. இதுவும் கடந்து போகும் என்ற நிலையை எட்டுவதற்கான முதிர்ச்சியை பெண்கள் அடைய வேண்டும். 

தோல்வியில் இருந்து மனதளவில் மீண்டு வர, நண்பர்கள் மற்றும் சமூகத்தோடு இணைந்து பழக வேண்டும். இதனால் உங்கள் சில மணிநேரங்கள் உங்கள் கவலைகளை மறந்து இருக்கலாம். ஆண்களுக்கு பெண்கள் அதிகமாக தன்னம்பிக்கை ஊட்டுவார்கள். ஆனால், அவர்களிடம் அந்த நம்பிக்கை கொஞ்சம் குறைவாக தான் இருக்கும். இதிலிருந்து அவர்கள் கொஞ்சம் வெளிவர வேண்டும். 

சூழ்நிலைகள் கண்டு பயந்து ஓடினால் அது நம்மை துரத்திக்கொண்டு தான் வரும். எனவே, நாம் அதை விரட்டி அடிக்க, எதிர்க்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் உறவு / வேலை சார்ந்து எந்த பிரச்சனை என்றாலும் அதை எதிர்த்து போராடும் குணம் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments